Published : 12 Jun 2014 10:00 AM
Last Updated : 12 Jun 2014 10:00 AM

ஜூன் 16 முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

2014-15-ம் ஆண்டில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இம்மாதம் ஜூன் 16-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு முதன்மைச் செயலர் த.சபிதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி நிரவல் இம்மாதம் 16-ம் தேதி நடைபெறும். அரசு- நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மாறுதல் மற்றும் மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல்) கலந்தாய்வு 18-ம் தேதியும், அரசு- நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 19-ம் தேதியும், அரசு- நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் (மாவட்டத்துக்குள் மாறுதல் மற்றும் மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல்) கலந்தாய்வு இம்மாதம் 20-ம் தேதியும் நடைபெறுகிறது.

அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூன் 22-ம் தேதியும், அரசு- நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு மற்றும் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான மாறுதல் (மாவட்டத்துக்குள்) கலந்தாய்வும் ஜூன் 23-ம் தேதி நடைபெறுகிறது. முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம்விட்டு மாவட்டம்) கலந்தாய்வு 24-ம் தேதியும், முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 25-ம் தேதியும் நடைபெறுகின்றன.

பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவலுக்கான கலந்தாய்வு இம்மாதம் 26-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்) மாறுதல் கலந்தாய்வு 27-ம் தேதியும், மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஜூன் 28-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இம்மாதம் 29-ம் தேதியும் நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கலந்தாய்வுகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு- நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு மற்றும் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான மாறுதல் (மாவட்டத்துக்குள்) கலந்தாய்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x