

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் அடுத்த மேல்மொண வூரில் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டம் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை தாங்கி பேசும்போது, ‘‘திமுக அரசு பொறுப்பேற்றதும் இலங்கை தமிழர் முகாம்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் இந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததுடன் தொடக்க விழா நிகழ்ச்சியை நான் வேலூரில் தொடங்கி வைக்கிறேன் என்றார்.
அதேபோல், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கான குழு அமைத்து பேசி வருகிறோம். இதில், 120 நாடுகளில் வசிக்கும் தமிழர் பிரதிநிதிகள் பங்கேற்று பேசும்போது, முதல்வர் மீது அவ்வளவு நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். வெளிநாடு வாழ் தமிழர்கள் பலர் இங்குள்ள கிராமங் களை தத்தெடுக்க ஆர்வமுடன் உள்ளனர்’’ என்றார்.
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்து பேசும்போது, ‘‘பெரும் திட்டங்களை தீட்டுவது, கோடிக்கணக்கில் செலவு செய்வது, விவசாயிகள், வியாபாரிகளை பார்ப்பது என்று மட்டுமில்லாமல் வாழ்க்கையின் ஓரத்தில் ஒதுக் கப்பட்டு வறுமையால் வாடி, நிற்பதற்கு இடமில்லாமல் ஒழுகு கின்ற வீட்டுக்குள் வாழ்பவர்களை தேடித்தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு முதல்வர் உதவி செய்கிறார்.
நம்முடைய தொப்புள் கொடி உறவு, நம்முடைய ரத்தத்தின் ரத்தம், தமிழன் என்ற உணர்வோடு எல்லா சிறப்பையும் பெற்று இலங்கை தீவில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் இன்று நாடற்ற வர்களாக, உயிரற்றவர்களாக, உறவுகள், சொத்துக்களையும் சுகத்தையும் இழந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு இந்த தமிழ் மண்ணுக்கு வந்த நேரத்தில் அவர்களுக்காக போராடியவர் கருணாநிதி. ஆனால், இன்றைக்கு அகதிகள் என்ற பெயரை இலங்கை தமிழர்கள் என்று பெயர் சூட்டி முதல்வர் ஸ்டாலின் பெருமை படுத்துகிறார்.
எங்களுக்கு இங்கு ஓட்டுரிமை இல்லை, குடும்ப அட்டை இல்லை, இருக்க வீடில்லை எங்களை யார்? காப்பாற்றுவார்கள் என ஏங்கிக்கிடந்தவர்களின் இதயத்தை வருடி நான் இருக்கிறேன் என்று முன் வந்துள்ளார் முதல்வர். அவர்கள் முதல்வரை முதல்வராக பார்க்காமல் கடவுளாக பார்க் கிறார்கள். இலங்கை தமிழர் களுக்கு இங்கு எல்லா உரிமையும் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.