Published : 01 Mar 2016 10:21 AM
Last Updated : 01 Mar 2016 10:21 AM

பாஜகவுக்கு 160 கட்சிகள் இருக்கு: இளங்கோவன் கிண்டல்

தேமுதிக, பாமக மட்டுமல்ல; அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய கல்வி முன்னேற்றக் கழகம் என சிறிய கட்சிகளுடன் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தியது அரசியல் வட்டாரங்களிலும். சமூக ஊடகங்களிலும் கேலி, கிண்டலுடன் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் - பிரகாஷ் ஜவடேகர் சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த இளங்கோவன், ‘‘விஜயகாந்த், அன்புமணி ராமதாஸூடன் மட்டுமல்ல, பெயரே தெரியாக உதிரிக் கட்சிகளுடன் எல்லாம் மத்திய அமைச்சர் கூட்டணி பேச்சு நடத்தியிருக்கிறார். தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகள் மட்டும் 160-க்கும் அதிகமாக உள்ளன. இந்த 160 கட்சிகளுடனும் பாஜக பேச்சு நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என்றார் கிண்டலாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x