

மைதானத்தை தனியாருக்கு வாட கைக்கு விடுவதைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வி மாணவர்கள் தொடர்ந்து நேற்று 3-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி யில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இளநிலை மற்றும் முதுநிலையில் பிபிஎட், எம்பிஎட் மற்றும் இடைநிலைக் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இக்கல்லூரி மாணவ, மாணவியர் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 நாட்களாக, பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் கூறும்போது, ‘‘ஆசியாவிலேயே உடற்பயிற்சி கல்விக்காக முதன் முதலில் உருவாக்கப்பட்ட கல்லூரி என்ற சிறப்பைப் பெற்றது இந்த கல்லூரி. ஆனால் இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் இங்கு பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதி யாக தொந்தரவு கொடுத்து வருகிறார். கல்லூரி பெண்கள் விடுதி வார்டன், மாணவிகளை அவதூறாக பேசுகிறார்.
இதுபோன்று ஏராளமான பிரச்னைகள் இங்கு நிலவுகின்றன.
தொடர்ந்து நீடித்து வரும் இந்த மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு இந்திய மாண வர் சங்கம் மற்றும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களும், தமாகா மாணவர் அணி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட் டனர் என்பது குறிப்பிடத்தக்கது.