நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சவால்கள் நிறைந்தது: மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் கருத்து

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்த மண்டல ஆய்வுக் கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகை, அம்மா மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநில தேர்தல் ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி, சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயராணி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். படம்: க.பரத்

Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சவால்கள் நிறைந்தது என்று மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள நிலை யில், பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆணையர் பெ.பழனிகுமார் பேசியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைஅமைதியாக நடத்த அலுவலர்களின் ஒத்துழைப்பு அவசியம். தேர்தலை நடத்தி முடிப்பதற்கான காலஅளவு குறைவாக உள்ளது. உச்ச நீதிமன்றம் 4 மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளதால், குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சவால்கள் நிறைந்தது.

2006-ல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு பேரூராட்சிகள், 3-ம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் விதிகள் அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த விதிகள் குறித்து அலுவலர்கள் தெரிந்துகொண்டால், சட்டரீதி யாகவும், அமைதியாகவும், நேர் மையாகவும் தேர்தலை நடத்தி முடிக்கலாம்.

அதற்கான பயிற்சி அளிக்கவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே, தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க அனைத்து அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநில தேர்தல் ஆணையச் செயலர் எ.சுந்தரவல்லி, சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயராணி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாநகராட்சி துணை ஆணையர்கள் விஷு மகாஜன், டி.சிநேகா, எஸ்.மனீஷ், எண்.சிவகுரு பிரபாகரன், சிம்ரன் ஜீத் சிங் காஹ்லோன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in