கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு

கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு
Updated on
1 min read

கூட்டுறவு நிறுவனங்களில் அடகு வைக்கப்பட 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தினர் 31.03.2021 வரை 5 பவுனுக்கு உட்பட்டு மொத்த எடை 40 கிராம் வரை தங்க நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் பெற்றதில் ஒரு சில கடன்தாரர்கள் தங்களது கடன் தொகையை பகுதியாகவோ அல்லது

முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக, 31.03.2021ஆம் நாள் வரை நிலுவையில் இருந்த தொகை ரூ.17.11.64 கோடி என்றும், அதற்குப் பிறகு 01.04.2021 முதல் 30.09.2021 வரை பொது நகைக் கடன்களை பகுதியாகவோ அல்லது முழுவதுமாக திரும்பச் செலுத்தியது மற்றும் தகுதி பெறாத தேர்வுகளை நீக்கிய பின்னர் அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்டு நிலுவையாக ரூ.6000 கோடி (தோராயமாக) உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எனவே, முதல்வரின் அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவின் அடிப்படையில் கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தில் 31.03.2021 ஆம் நாள் வரை 5 பவுனுக்கு உட்பட்டு (மொத்த எடை 40 கிராமுக்கு உட்பட்டு) பொது நகைக் கடன் பெற்று அதில் சில கடன்தாரர்கள் நாளது தேதிவரை தங்களது நிலுவைத் தொகையினை பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும் தகுதி பெறாத் தேர்வுகளை நீக்கிய பின்னரும் இந்த அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையிலுள்ள ரூ.6000 கோடி நகைக் கடன்களை இந்த ஆணையின் இணைப்பு 1 மற்றும் 2ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது. இதனைப் பின்பற்றி அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அரசாணையின் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தேவைக்கேற்ப கூடுதலாக நெறிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.

மேற்கண்டவாறு தள்ளுபடி செய்யப்பட்ட பொது நகைக் கடன் தொகையினை அளவீடு மற்றும் செலவீடு செய்து உரிய குறிப்பாணைகள் வெளியிட ஏதுவாக உரிய கருத்துருவினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in