

சேலத்தில் செய்தியாளர்களிடம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
அதிமுக-வின் 5 ஆண்டு ஆட்சியில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக நிர்வாகக் கடன் வைத்திருப்பது, முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. 64 வயதாகும் திமுக-வுக்கு தனித்து போட்டியிட தைரியமின்றி, கூட்டணிக்காக மற்ற கட்சிகளிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அவர்களுடைய தன்னம்பிக்கை இன்மையை காட்டுகிறது.
கடந்த இரு தேர்தலில் திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. பாமக விஞ்ஞான முறையில் அரசியலை கையாளுகிறது. விஞ்ஞான முறையில் மக்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கும். தேமுதிக தனித்து போட்டியிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எதிர்கட்சி தலைவராக இருந்து அவர் என்ன செய்தார். எத்தனை முறை சட்டப்பேரவைக்கு சென்றார். மக்கள் பிரச்சினைக்காக என்னென்ன கேள்வி எழுப்பினார்.
மக்களுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தினார் என்பது தான் அவருக்கான என் கேள்வி. கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் என் கருத்து.