

சென்னையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கின்போது, ராணுவ வீரர்கள் ஆற்றிய மகத்தான நிவாரணப் பணிக்கு இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் பாராட்டு தெரிவித்தார்.
சென்னைக்கு வந்துள்ள இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங், சென்னையில் உள்ள தென்பிராந்திய ராணுவ தலைமையகத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அவரை தென்பிராந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜென்ரல் ஜக்பீர் சிங் வரவேற்றார்.
தென்பிராந்திய ராணுவ தலை மையகம் மூலம் வீரர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களின் நலன்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பல்வேறு சேவை கள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
மேலும், சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது 19 ஆயிரத்து 500 பேரை உயிருடன் மீட்ட தோடு, 20 ஆயிரம் பேருக்கு மருத்துவ உதவிகளும், 2 லட்சம் பேருக்கு நிவாரண உதவிகளும் ராணுவத்தால் வழங்கப்பட்டது குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதைக் கேட்ட ராணுவ தளபதி, ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அப்போது, தென்பிராந்திய ராணுவ தளபதி பிபின் ரவாத் உடனிருந்தார்.