Published : 04 Mar 2016 10:01 AM
Last Updated : 04 Mar 2016 10:01 AM

ப.சிதம்பரத்தை சிவகங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ஹெச்.ராஜா விருப்பம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிவகங்கை தொகுதி மக்கள் புறக்கணிக்க வேண்டும் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்கனவே நிதி மோசடி செய்து பதவி இழந்தவர். 2ஜி வழக்கு அறிக்கையை இழுத்து மூடச்செய்தவரும் அவரே. மாறன் சகோதரர்கள் தொடர் புடைய ஏர்செல் மேக்ஸிஸ் ஊழலி லும் ப.சிதம்பரம் முக்கிய நபராக இருந்து செயல்பட்டுள்ளார். மாறன் சகோதரர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போது, ப.சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கி றோம், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் எனக் கூறி இருக்கிறது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக் கிறது.

இந்நிலையில், இங்கிலாந்து ராணி வாங்க முடியாத சொத்துக்களைக்கூட ப.சிதம்பரமும், அவரது மகனும் வாங்கியிருக்கின்றனர் என தி பயோனியர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரதமர் மோடியையும், பாஜக தேசியத் தலைவர் அமீத்ஷாவையும் சிக்க வைப்பதற்காக, ஒரு அதிகாரிக்கு நெருக்கடி கொடுத்து பிரமாணப் பத்திரத்தை திருத்தியதற்கு இந்த நாட்டு மக்களிடம் ப.சிதம்பரம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழக மக்களுக்கு ப.சிதம்பரம் களங்கம் ஏற்படுத்தியுள்ளார். எனவே அரசியல் களத்தில் இருந்தே அவரையும், அவரது மகனையும் அப்புறப்படுத்த வேண்டும். சிவகங்கை தொகுதி மக்கள் ப.சிதம்பரத்தை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x