

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அச்சக உரிமையாளர்கள் ஜாதி, மத உணர்வுகளை தூண்டக்கூடிய, பிரிவினை வாதத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் எந்தவித பிரசுரங்களும் அச்சிடக்கூடாது. இது தொடர்பாக அச்சக உரிமையாளர்களை அழைத்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஜாதி உணர்வுகளைத் தூண்டும் வகையில் சுவரொட்டிகள் தூத்துக்குடி பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அந்த சுவரொட்டிகளை அச்சிட்ட அச்சக உரிமையாளர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127ஏ-ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் எஸ்.கோபால சுந்தரராஜ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.