‘மீம்ஸ்’ மூலம் விழிப்புணர்வு தேர்தல் துறை தீவிரம்

‘மீம்ஸ்’ மூலம் விழிப்புணர்வு தேர்தல் துறை தீவிரம்
Updated on
1 min read

18 வயது நிறைவடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக பல்வேறு விளம்பர உத்திகளை தேர்தல் துறை பயன்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் இரட்டைபதிவுகள், இறந்தவர்கள் பெயர்களை நீக்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர் களை சேர்க்கும் பணியும் நடந்து வருகிறது.

கல்லூரிகளில் 18 வயது நிரம்பி யவர்கள் இருந்தால், சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், இளம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு விளம்பர உத்தி களை தேர்தல் துறை கையாண்டு வருகிறது. வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்’ மூலம் விளம்பரப்படுத்துகிறது. குறிப்பாக,‘18 வயதில் என்ன பண் ணனும்ன்னு உனக்கு தெரியும்... கண்ணா ஓட்டு போட ஆசையா...’’ என்ற வாசகங்கள் அடங்கிய மீம்ஸ்கள் தற்போது உலாவருகின்றன.

இது தவிர, ஓட்டுப் போட வேண்டி யதன் அவசியத்தை உணர்த்தியும் பல்வேறு விளம்பரங்கள் தற்போது ‘வாட்ஸ் அப்’பில், தேர்தல் துறை யால் வெளியிடப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in