தமிழகம் முழுவதும் நடைபெற்ற 7-ம் கட்ட மெகா முகாமில் 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 7-ம் கட்ட மெகா முகாமில் 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் நடந்த 7-வது கட்ட மெகா முகாமில் 17.14 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 5 கட்டங்களாக முகாம்கள் நடத்திதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், அசைவம் சாப்பிடுவோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்ற தவறான தகவல் இருப்பதால், அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில்லை எனதெரியவந்தது. அதனால், மெகாமுகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதன்படி, கடந்த 23-ம் தேதி 6-வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற மெகா முகாமில் 22.33 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், 7-வது கட்டமெகா தடுப்பூசி முகாம் தமிழகம்முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்உட்பட 50 ஆயிரம் இடங்களில்நேற்று நடந்தது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடந்த முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் ஆய்வு செய்தனர்.

நேற்று நடந்த 7-ம் கட்ட முகாமில் 17.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்றுதடுப்பூசி மையங்கள் செயல்படாது.

1,021 பேருக்கு தொற்று

தமிழகத்தில் நேற்று ஆண்கள்613, பெண்கள் 408 என மொத்தம் 1,021 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 1,614 ஆக அதிகரித்துள்ளது. 11,685 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று 14 பேர் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in