Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM

அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஏற்றால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முடியும்: பாஜக தேசிய பொதுச் செயலாளர் புரந்தேஸ்வரி தகவல்

அனைத்து மாநில நிதி அமைச் சர்களும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடியும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் புரந் தேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜக கேந்திர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது. தேசிய பொதுச்செயலாளர் புரந்தேஸ்வரி தலைமை தாங்கினார். மாநிலதலைவர் சாமிநாதன், அமைச்சர் கள் நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார், செல்வகணபதி எம்பி, பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொகுதி வாரியாக நிர்வாகிகளி டம் ஆலோசனை நடத்தி கருத் துக்களை கேட்டறிந்தனர்.

கூட்டத்துக்குப் பின்னர் புரந்தேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் பாஜக கட்ட மைப்பு எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்வதற்கு வந்தேன். இங்கு வந்து நிர்வாகிகளுடன் பேசும்போது ஒரு உத்வேகம் ஏற்பட்டுள்ளதோடு, வரும் காலங்களில் கட்சி பலம்பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

கரோனா காலகட்டத்தில் முழு நேரமும் மக்களுக்கு சேவை செய்தது பாஜக தான். மேலும், இந்தியாவில் 100 கோடிக்கும் மேலாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறப்பான செயல்பாடுகள் தான் காரணம். ஒவ்வொரு பாஜக வினருக்கும் இதனால் பெருமை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியுடன் பாஜக ஆட் சிக்கு வந்தபின் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் வழங் கப்பட்டு வருகிறது. குப்பை, தண்ணீர் வரி நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் மூத்த தலைவர்களை புறக்கணிக்க மாட்டோம். அவர் களுக்கு உரிய மரியாதை கொடுப் போம் என்றார்.

அப்போது அவரிடம், பெட் ரோல், டீசல், காஸ் விலை தொடர்ந்து அதிகரிகிறதே? அவற்றின் விலையை குறைக்க,ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப் படுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘ஜிஎஸ்டிக்குள் பெட் ரோல், டீசலை கொண்டுவந்தால் அதன் விலை கட்டுப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநில நிதி அமைச்சர் களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடியும்.

பாஜக அல்லாத மற்ற மாநிலங்களும் பெட்ரோலை ஜிஎஸ் டிக்குள் கொண்டுவர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x