

பக்கவாதத்தால் பாதிப்பட்ட 6 மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுத்தால் குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக பக்கவாத நாளையொட்டி மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் கோட் ஸ்ட்ரோக் என்னும் புதிய மருத்துவ சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. மருத்துவமனை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
வேலம்மாள் மருத்துவமனை நரம்பியல் மருத்துவ நிபுணர் கணேஷ்பாண்டியன், உதவி பேராசிரியர் கவிதா ஆகியோர் பேசியதாவது: அனைத்து வயதி னருக்கும் பக்கவாதம் வரலாம். நீரிழிவு, அதிக எடை, மது, அமைதியின்மை, உடற்பயிற்சி இன்மை உள்ளிட்ட காரணங் களால் பக்கவாதம் வர அதிக வாய்ப்புள்ளது.
பார்வை மங்குதல், முகவாதம். தோள்பட்டை வலி, பேச்சு வராமல் போவது நோயின் அறிகுறிகள். பக்கவாத பாதிப்பு வந்தவர்களை 80 சதவீதம் குணப்படுத்த முடியும். இதற்கு பாதிக்கப்பட்டோர் 6 மணி நேரத்துக்குள் சிகிச்சை பெறுவது அவசியம். இந்த நேரத்துக்குள் சிகிச்சை பெறும்போது மூளை நரம்பில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய முடியும். அவ்வாறு செய்தால் சிறிய பாதிப்புடன் உயிர் தப்பிக்க வாய்ப்புள்ளது என்றனர்.