

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் சிலர் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்பகுதியில் ஒரு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று மாலை கூட்டமாகத் திரண்டு கோரிப்பாளையம் வழியே மாட்டுத்தாவணி சென்ற அரசு பேருந்துகள், தனியார் கார்கள், அரசு வாகனங்களை வழிமறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். இதில் இளைஞர்கள் சிலர் அரசு பஸ்கள், தனியார் கார்களின் மேற்கூரை மீது ஏறி நடனமாடி கூச்சலிட்டனர். அப்போது கைகளால் கார் கண்ணாடிகளையும் தாக்கினர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.