

தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சென்னை சேலையூர் மாணவியின் குடும்பம் வறுமையி லும், வேதனையிலும் வாடுகிறது.
பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக் கில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி தனி நீதிமன்றம் கடந்த 2000 பிப்ரவரி 2-ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழ கம் முழுவதும் அதிமுகவினர் வன் முறையில் ஈடுபட்டனர். தருமபுரி அருகே கோவை அரசு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சொந்த மான பஸ்ஸுக்கு தீவைத்தனர். பஸ்ஸில் இருந்த நாமக்கல்லை சேர்ந்த கோகிலவாணி, விருத்தா சலத்தை சேர்ந்த காயத்ரி, சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் அதிமுகவினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனி யப்பன் ஆகியோருக்கு விதிக்கப் பட்டிருந்த தூக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை யாக குறைத்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனால், பஸ் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 3 மாணவிகளின் குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நீதித்துறை மீது இருந்த நம்பிக் கையே போய்விட்டதாக வருத்தத் துடன் கூறுகின்றனர்.
உயிரிழந்த மாடம்பாக்கம் மாணவி ஹேமலதாவின் தாய் காசியம்மாள் கூறியதாவது:
தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கின் றனர். மேலும் தண்டனைக் குறைப்பு செய்து அவர்களை விடுதலையே செய்துவிடுவார்கள். நாங்கள் மிகுந்த மன வேதனையில் இருக் கிறோம். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை.
என் கணவரும் இறந்துவிட்டார். மகன் இன்ஜினீயரிங் முடித்து 2 ஆண்டுகள் ஆகிறது. அவனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக் கவில்லை.
எனக்கு சிறுநீரகங்கள் செய லிழந்துவிட்டது. வாரத்துக்கு 2 முறை டயாலிசிஸ் செய்து வருகிறேன். குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறது. இதுபற்றி இனிமேல் பேசி என்ன நடக்கப் போகிறது.
இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.