

தமிழகம் முழுவதும் இன்று (அக்.30) நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமில் 17.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக முதல்வரின் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 32,205 மையங்களில் மெகா கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது.
இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும்
அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற ஆறு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:
சுற்று முகாம் தேதி பயனாளிகள் (இலட்சத்தில்)
இன்று (30-10-2021) நடைபெற்ற ஏழாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 17,14,111 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 6,26,955 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 10,87,156 பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இன்று (30.10.2021) நடைபெற்ற ஏழாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (31.10.2021) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.