7-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 50 ஆயிரம் இடங்களில் இன்று நடக்கிறது

7-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 50 ஆயிரம் இடங்களில் இன்று நடக்கிறது
Updated on
1 min read

தமிழகத்தில் 7-வது கட்டமாக இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசிசெலுத்தக்கூடாது என்ற தவறான தகவல் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதன்படி, கடந்த 23-ம் தேதி 6-வது கட்ட முகாம் நடந்தது. இந்நிலையில், 7-வது கட்ட மெகா முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in