‘லிங்கா’ திரைப்பட கதை திருட்டு வழக்கு: ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமாருக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்

‘லிங்கா’ திரைப்பட கதை திருட்டு வழக்கு: ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமாருக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

‘லிங்கா’ திரைப்பட கதை திருட்டு வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயா ரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரவிரத்தி னம் என்பவர், கதை திருட்டு தொடர் பாக ‘லிங்கா’ திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது முல்லைவனம் 999 படத்தின் கதை யைத் திருடி, லிங்கா திரைப் படத்தை தயாரித்துள்ளனர். இத னால் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன் குமார், இயக்குநர் கே.எஸ்.ரவி குமார், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கதை திருட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராக்லைன் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. அந்த கெடு முடிந்தும் விசாரணை முடியவில்லை. எனவே விசாரணையை வேறு நீதிமன்றத் துக்கு மாற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கதை திருட்டு வழக்கை மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது. இருப்பினும் இந்த வழக்கை ஏப்.30-க்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, கதை திருட்டு வழக்கின் விசாரணை வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ், கே.எஸ்.ரவிகுமார், பொன்குமார் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இந்த வழக்கை ஏப். 30-ம் தேதிக்குள் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருப்பதால், இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து முன்கூட்டியே (மார்ச் 8) விசாரணைக்கு பட்டியலிடுகிறது. இன்று நடைபெறும் விசாரணையில் வாதி, பிரதிவாதிகளுடன் அவர் களின் வழக்கறிஞர்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in