பேரவை தேர்தலுக்குப் பிறகே முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

பேரவை தேர்தலுக்குப் பிறகே முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு
Updated on
1 min read

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் (நேரடி நியமனம்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி இயக்குநர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் அரசு அனுமதி வழங்கியது. இதுதொடர்பான அரசாணையும் உடனடியாக பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் எப்போது வெளியிடும் என்று பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசாணை வெளியிடப்பட்டு 3 வாரங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் உமாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தேர்தல் முடிவடைந்த பின்னரே அறிவிப்பு வெளியாகும். ஆனால், முன்னறிவிப்பு செய்யப்பட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு உமா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in