Published : 26 Jun 2014 08:00 AM
Last Updated : 26 Jun 2014 08:00 AM

மு.க.அழகிரி அபகரித்ததாக புகார் எழுந்த நிலத்தை கையகப்படுத்தும் பணி தீவிரம்- முள்புதர்களை அகற்றி எல்லைக் கற்கள் நடப்பட்டன

தயா கல்லூரி கட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அபகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள கோயில் நிலத்தை கையகப் படுத்தும் பணி வேகமாக நடை பெற்று வருகிறது. இதன்படி அந்த இடத்திலுள்ள முள்புதர்கள் அகற்றப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியை கட்டுவதற்காக அருகிலுள்ள விநாயகர் கோயிலின் 44 சென்ட் நிலத்தை திட்டமிட்டு போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக மு.க.அழகிரி மீது அதே கிராமத்தைச் சேர்ந்த ராம லிங்கம் என்ற விவசாயி கடந்த வெள்ளிக்கிழமை மதுரை ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் புகார் மனு அளித்தார்.

பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இதுபற்றி விசாரணை நடத்து மாறு இந்து அறநிலையத் துறை ஆணையர் தனபால் உத்தர விட்டார். அதன்பேரில் இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் சுரேந்திரன், உதவி ஆணையர் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் குழு திங்கள்கிழமை சிவரக்கோட்டை சென்று விசாரணை நடத்தி, ஆணையருக்கு அறிக்கை அளித்திருந்தனர்.

மேலும் சர்ச்சைக்குரிய இடம் முள்காடுகளாக இருந்ததால், அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வருவாய்த் துறை மூலம் நில அளவை செய்ய முடிவு செய்தனர். இதற்காக இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் முத்து தியாகராஜன், உதவி ஆணையர் கருணாநிதி தலைமையிலான குழுவினர் புதன்கிழமை மீண்டும் அங்கு சென்ற னர்.

பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடத்திலிருந்து முள்செடிகள் அகற்றப்பட்டன. பின்னர் திருமங்க லம் தாலுகா வருவாய் அதி காரிகள், நில அளவையர்கள் மூலம் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை அளவிட்டு, நான்கு எல்லை கற்கள் நடும் பணியில் ஈடு பட்டனர். அதற்குள் இருள் சூழ்ந்து விட்டதால் மீதமுள்ள பணிகளை வியாழக்கிழமை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், கோயி லுக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. முள்புதராக இருப்பதால் அவற்றை சுத்தப் படுத்தி வருகிறோம். வருவாய் துறை மூலம் எல்லை கண்டறியப் பட்டு கல் ஊன்றப்பட்டுள்ளது. அந்த இடத்தை யாரும் ஆக்கிர மிப்பு செய்யக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட உள்ளது. அந்த நிலத்தை மு.க.அழகிரி அபக ரித்து வைத்திருந்தாரா என்பதை விசாரணையின் முடிவில்தான் சொல்ல முடியும். விவசாயி ராமலிங்கம் அளித்த ஆவணங் களைப் பரிசீலித்து வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x