‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து விளக்கம்; முதல்வரின் பொறுப்புணர்வு மெச்சத்தக்கது: இந்திய கம்யூ. கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பாராட்டு

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து விளக்கம்; முதல்வரின் பொறுப்புணர்வு மெச்சத்தக்கது: இந்திய கம்யூ. கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பாராட்டு
Updated on
1 min read

தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து உரிய விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலினின் பொறுப்புணர்வு மெச்சத்தக்கதாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இல்லம் தேடி கல்வி திட்டத்தை விளக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை மதிப்புமிக்கதாகும். இந்த திட்டத்தில் சங்பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சை விதைக்கும் விபரீதம் ஏற்படக் கூடும் என்பதை கருத்தில் கொள்ளுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதை கருத்தில்கொண்டு, 86,550 பேர் இத்திட்டத்தில் பணியாற்ற பதிவு செய்துள்ளதாகவும், அவர்களின் செயல்பாடு கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும் என்றும், அரசின் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிப்பவர்கள் மட்டுமேதன்னார்வலர்களாக தொடர அனுமதிக்கப்படுவர் என்றும் முதல்வர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திஉள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மாநில கல்விக் கொள்கையை வகுத்திட கல்வியாளர்கள் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும் என்றும்தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

கூடுதலாக ஒரு லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவதை இலக்காக கொண்டு செயல்படுவதாக கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. மாற்றுக் கருத்துகளை உள்வாங்கி, அதில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் குறித்து விழிப்புடன் இருப்பதாக விளக்கம் தரும் பொறுப்புணர்வு மெச்சத்தக்கதாகும்.

தமிழக அரசு முன்வைத்துள்ள உன்னத நோக்கங்களுக்கு ஏற்ப ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் செயல்படுத்தப்படுமானால், அத்திட்டம் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in