சென்னையில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க 48 குழுக்கள்

சென்னையில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க 48 குழுக்கள்
Updated on
1 min read

தேர்தல் விதிமீறல்களை கண் காணிக்க சென்னையில் மட்டும் 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரி வித்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதி களுக்கு பயன்படுத்தப் படும் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் புளியந்தோப்பு, சவுகார் பேட்டை, வேளச்சேரி ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை சோதனை செய்யும் பணி புளியந்தோப்பில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணை யாளர் சந்திரமோகன் இதை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னையில் மட்டும் தேர்தலுக் காக 3,699 வாக்குச்சாவடி மையங் கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 7 ஆயிரத்துக்கும் அதிக மான வாக்குப்பதிவு இயந்திரங் களும், 4,850 கட்டுப்பாட்டு கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

வாக்காளர்கள், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை கண்டறியும் வசதி, அண்ணாநகர் தொகுதியில் செய்து தரப்படும். ஆனால் அதற்கான ஒப்புகை சீட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in