தொகுதிப் பங்கீடு: நால்வர் ஆலோசனை குழு அமைத்தது திமுக

தொகுதிப் பங்கீடு: நால்வர் ஆலோசனை குழு அமைத்தது திமுக
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ல் நடைபெறவிருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்க 4 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

1.திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், 2.முதன்மைச் செயலாளர் துரைமுருகன் 3.துணைப் பொதுச் செயலாளர், ஐ. பெரியசாமி 4. அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதிஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக கடும் முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், விஜயகாந்த் தனித்து போட்டி என அறிவித்துவிட்டார்.

விஜயகாந்த் முடிவு திமுகவுக்கு பின்னடைவு என பேசப்பட்டுவரும் நிலையில் தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகளுக்காக திமுக குழு அமைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in