Published : 16 Mar 2016 09:12 AM
Last Updated : 16 Mar 2016 09:12 AM

தேர்தல் குழுக்களில் யார், யாரை நியமிப்பது? - ராகுலுடன் இளங்கோவன் மீண்டும் ஆலோசனை

தேர்தல் குழுக்களில் யார், யாரை இடம் பெறச் செய்வது என்பது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத், திமுக - காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தினார். ஆனால், தேமுதிகவை கூட்டணிக் குள் கொண்டு வரும் முயற்சியில் இருந்த திமுக, காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதை தாமதப்படுத்தி வந்தது. இப்போது தேமுதிக தனித்துப் போட்டி என அறிவித்து விட்டதால் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த 4 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.

தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால் திமுகவிடம் அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்ற கோரிக்கை காங்கி ரஸில் வலுத்து வருகிறது. மேலும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்காக 3 குழுக் களை அமைக்க வேண்டும் என ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 11-ம் தேதி டெல்லி சென்ற இளங்கோவன், தேர்தல் குழுக்கள் அமைப்பது குறித்தும் திமுகவிடம் எத்தனை தொகுதி களை கேட்டுப் பெறுவது என்பது தொடர்பாகவும் ராகுல் காந்தி யுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் டெல்லி சென்ற இளங் கோவன் ராகுலுடன் தமிழக தேர் தல் பணிகள் குறித்தும் சோனியா, ராகுல் பிரச்சாரம் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் அறிக்கை தயாரித்தல், தொகுதி பங்கீடு பேச்சுவார்ததை நடத்துதல், வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்திகளை தீர்மானித் தல் ஆகியவற்றுக்காக 3 குழுக் கள் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. திமுகவுடன் பேசும் குழுவில் குலாம்நபிஆசாத், முகுல் வாஸ்னிக், அஜய் மக்கான் போன்ற மேலிடத் தலைவர்கள் இடம்பெறுவர். மற்ற இரு குழுக் களிலும் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய நிர்வாகிகள், முன்னாள் மாநிலத் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் இடம் பெறுவர்’’ என்றார்.

இதற்கிடையே, தங்கள் மகன் களுக்கு தேர்தலில் சீட் வாங்கி விட வேண்டும் என்பதில் இளங் கோவன், ப.சிதம்பரம், எம்.கிருஷ் ணசாமி, சு.திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், இரா.அன் பரசு, நாசே ராமச்சந்திரன், ஜே.எம்.ஆருண் ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் எம்எல்ஏ டி.யசோதா தனது நெருங்கிய உறவினருக்கு வாய்ப்பு கேட்பதாகவும் கூறப் படுகிறது. திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கும் என்பது தெரியாத நிலையில் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள இந்த சீட் மோதல், கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x