அதிமுக சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் நீக்கம்

அதிமுக சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் நீக்கம்
Updated on: 
1 min read

அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுதுணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர், செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. இதற்குச் சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏ உள்ளிட்ட சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்ததுதான் முக்கிய காரணம்.

எனவே, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பழனிசாமியைக் கட்சியை விட்டு நீக்கவேண்டும்” என்றார். பேட்டி அளித்த ஒரு சிலநிமிடங்களிலேயே ஜே.எம்.பஷீர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டிருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in