

மரக்காணம் பகுதியில் உள்ள 19 மீனவர் கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி படகு களை நிறுத்துவதற்கு மீன்பிடித் துறைமுகம் இல்லை. பங்கிங்காம் கால்வாயில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தி ருந்தனர்.
இந்நிலையில் மரக்காணம் அழகன்குப்பம் பகுதி பக்கிங்காம் கால்வாயில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ. 261 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து மீன்பிடித் துறைமுகம் அமைய உள்ள இடத்தை அப்போதையை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் ஆய்வு செய்து அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மீனவர் பொது மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ஆனாலும் இது நாள் வரையில் இதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதை சுட்டிக் காட்டி கடந்த 27-ம் தேதி நமது ‘இந்து தமிழ் திசை’ செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மரக்காணம் அருகே முதலியார்குப்பத்தில் ‘இல்லம் தேடி கல்வி” திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு குழுமியிருந்த மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, கடந்த 5 ஆண்டு களாக கிடப்பில் போடப்பட்ட மீன்பிடித் துறைமுக திட்டத்தை விரைந்து செயல்படுத்த மீனவர்கள் சார்பில் முதல்வரிடம் மனு அளிக் கப்பட்டது. “இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி யளித்தார்.
5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மீன்பிடித் துறைமுக திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.