

தேவர் ஜெயந்தி விழாவில் பங் கேற்க நேற்று மாலை மதுரை வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்ள சசிகலா, தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 4.20 மணியளவில் மதுரை வந்தார். அவருக்கு மதுரையில் வழி நெடுக ஆதரவாளர்கள், தென் மாவட்ட அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மேளதாளம் முழங்க வரவேற்றனர்.
அமமுக மண்டல பொறுப்பாளர் கே.கே.உமாதேவன், மதுரை மாவட்டச் செயலாளர் மகேந்திரன், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, எம்ஜிஆர் மன்ற மாநிலச் செய லாளர் பரமநாதன், செய்தி தொடர் பாளர் வெற்றிபாண்டியன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதிமுக தொண்டரான மதுரை கள்ளந்திரியைச் சேர்ந்த குர ளரசன்-அபிநயா தம்பதியின் குழந்தைக்கு மகிழ்சோழன் என பெயர் சூட்டினார். மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கிய சசிகலாவை அமுமக நிர்வாகிகள், அதிருப்தி அதிமுக நிர்வாகிகள் பலர் சந்தித்து பேசினர்.
இன்று காலை 7.30 மணியளவில் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கும் அதன்பின், தெப்பக்குளம் மருது பாண்டி யர்கள் சிலைக்கும் மாலை அணி வித்து மரியாதை செய்கிறார்.அதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினை விடத்துக்குச் செல்கிறார்.
அங்கு காலை 10.30 மணியளவில் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத் துகிறார்.