தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தலைவர்களை வரவேற்க பட்டாசு வெடிக்கத் தடை

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தலைவர்களை வரவேற்க பட்டாசு வெடிக்கத் தடை
Updated on
1 min read

தேர்தல் கூட்டங்களுக்கு வரும் தலைவர்களை தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்க தேனி மாவட்டக் காவல் துறை தடை விதித்துள்ளது.

தேர்தல் கூட்டங்களுக்கு வரும் கட்சித் தலைவர்களை பட்டாசு வெடித்து தொண்டர்கள் வரவேற்பர். பட்டாசுகளின் தீப்பொறி, குடிசை வீடுகள் மீது விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இதைத் தவிர்க்க நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேனி மாவட்ட காவல் துறை அரசியல் கட்சியினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இது தொடர்பாக உத்தமபாளையத்தில் காவல் துறையினர், அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி பேசியதாவது:

தேர்தல் பிரச்சாரத்துக்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தாமல் பாக்ஸ் (பெட்டி) வடிவிலான ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும். பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு 5 மணி நேரம் முன்பாகக் கட்சிக் கொடி, தோரணங்கள் கட்டிக் கொள்ளலாம். அதற்கு முன்பாகக் கட்டக் கூடாது. தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களில் அவர்களின் அனுமதி பெற்று சுவர் விளம்பரங்கள் செய்யலாம். அரசு கட்டிடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதக் கூடாது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள வரும் கட்சித் தலைவர்களை வரவேற்க பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அனுமதி பெற்ற நிகழ்ச்சிகளில் சட்டம்,ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் நிலை உருவானால் அந்தக் கூட்டம் எவ்வித அனுமதியும் இன்றி ரத்து செய்யப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in