Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

ஆர்க்டிக் பகுதியிலிருந்து தனுஷ்கோடிக்கு வலசை வரும் ஆலா பறவைகள்

தனுஷ்கோடி கடல் பகுதியில் கூட்டமாகத் திரியும் ஆர்க்டிக் ஆலா பறவைகள்.

ராமேசுவரம்

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளுக்கு 12 ஆயிரம் கி.மி தூரத்தைக் கடந்து ஆர்க்டிக் ஆலா பறவைகள் வலசை வரத் தொடங்கியுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களிலுள்ள நாடுகளிலிருந்து சீரான தட்ப வெப்பநிலையைத் தேடி தமிழகத் தின் செங்கல்பட்டு, திரு நெல்வேலி, நாகை, வேதாரண்யம், கடலூர், தனுஷ்கோடி, ராமேசுவரம் உள் ளிட்ட பகுதிகளுக்கு பிளமிங்கோ, ரஷ்ய நீர்வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளன், அரிவாள் மூக் கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங் கள், ஆர்க்டிக் ஆலா உள்ளிட்ட பறவைகள் வலசை வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை, தேர்த்தங்கால், காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேலச் செல்வனூர், கீழச்செல்வனூர் ஆகிய பகுதிகளில் பறவை சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் தொடங்கி மே மாதம் வரை வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வட துருவ ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து ஐரோப்பாவை கடந்து ஆர்க்டிக் ஆலா பறவைகள் தற்போது தனுஷ்கோடி கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.

தனுஷ்கோடி கடல் பகுதியில் குவிந்திருக்கும் ஆர்க்டிக் ஆலா பறவைகளை ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:

ஆர்க்டிக் ஆலா பறவைகள் வலசை வருவதற்கு சில நாட் களுக்கு முன்பே நிறைய உணவுகளை உண்டு அதனை தனது உடலில் கொழுப்பாக மாற்றி சேமித்துக்கொள்ளும். அதன் பின் நீண்ட தூரம் பறந்து வந்துவிடும்.

இப்பறவைகள் ஒரே முயற்சியில் 12 ஆயிரம் கி. மீ. தூரத்தை கடக்கக் கூடியவை. ஆர்க்டிக் பிர தேசங்களில் ஆண்டின் இறுதியில் நிலவும் மைனஸ் டிகிரி குளிர்ந்த வானிலையிலிருந்து தங்களை காத்துக் கொல்ல இவை இலங்கை, ராமேசுவரம், தனுஷ்கோடி, மன்னார் வளைகுடா கடல் பகு திக்கு வலசை வருகின்றன என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x