

நேற்று முன்தினம் இரவில் மதுரை கிழக்கு தொகுதியின் பறக்கும்படை அதிகாரியான வட்டாட்சியர் ராம மூர்த்தி தலைமையில் மதுரை அருகே பாசிங்காபுரத்தில் வாகனச் சோதனை நடைபெற்றது. அப் போது மினி லாரி ஒன்றில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 10,000 செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரி ஓட்டுநர் பெரியசாமி அதி காரிகளிடம் கூறும்போது,‘ ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்குக் கொண்டுச் செல்ல மானாமதுரை சிப்காட்டில் உள்ள தனியார் மென்பொருள் கிட்டங்கியில் இருந்து தலா 20 செல்போன்கள் கொண்ட 497 பெட்டிகளை ஏற்றி வந்தேன். பாசிங்காபுரம் அருகே உள்ள ஒரு கிட்டங்கியில் மேலும் சில பெட்டிகளை ஏற்ற வந்தேன். இதற்கான ஆவணங்கள் என்னிடம் தரப்படவில்லை’ என்றார்.
இதுபற்றி அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டதில் பாசிங்கா புரம் கிட்டங்கியில் ஓட்டுநர் சொல் வதுபோல் சரக்கு ஏதும் இல்லை எனத் தெரிந்தது.
இது குறித்து தொகுதி தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் செந்தில்குமாரி, மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீரராகவராவ் ஆகியோ ருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் உத்தரவின்பேரில் செல் போன்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன. வாக்காளர் களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்படுகிறதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.