

தூத்துக்குடி அருகே சுபாஷ் பண்ணையார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீசி நேற்று தாக்குதல் நடத்தினர். இதில், சுபாஷ் பண்ணையார் தப்பிவிட்டார். அவரது நெருங்கிய கூட்டாளி உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண் ணையார், பழையகாயல், சர்வோத யபுரியில் உள்ள தனது தென்னந் தோப்பில் நேற்று காலை இருந் தார். அப்போது 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு காரில் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். சுபாஷ் பண்ணையார் மற்றும் தோட்டத்தில் இருந்தவர் கள் மீது சரமாரியாக நாட்டு வெடி குண்டுகளை வீசினர். சுபாஷ் பண்ணையார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அந்த கும்பலிடம் இடையர் தவனை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி, பழையகாயலைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் சிக்கிக் கொண்டனர். இருவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டுகளை வீசி யும் படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
இதில் ஆறுமுகசாமி, சுபாஷ் பண்ணையாரின் மிக நெருங்கிய கூட்டாளி. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக் கில் இவர் முக்கிய குற்றவாளி. கொலை செய்யப்பட்ட மற்றொரு நபரான கண்ணன் சவரத் தொழி லாளி.
தலை துண்டிப்பு
2 பேரையும் படுகொலை செய்த அந்த கும்பல், சுபாஷ் பண்ணை யாரின் காரை அடித்து நொறுக்கி யது. ஆறுமுகசாமியின் தலையை துண்டித்து எடுத்துச் சென்று, தூத்துக்குடி அருகே தெய்வசெயல் புரத்தில் உள்ள பசுபதி பாண்டியன் நினைவு கொடிக்கம்பத்துக்கு கீழே போட்டுவிட்டு தப்பியோடியது.
திருநெல்வேலி சரக டிஐஜி தினகரன், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த தோட்டத்தில் கிடந்த வெடிக்காத நாட்டு வெடிகுண்டு ஒன்றை போலீஸார் கைப்பற்றி, அதனை செயலிழக்கச் செய்தனர்.
பழையகாயல், சுபாஷ் பண் ணையாரின் சொந்த ஊரான மூலக்கரை, பசுபதி பாண்டியனின் சொந்த ஊரான அலங்காரத்தட்டு உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. இந்த இரட்டை கொலை தொடர்பாக ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் பகை
திருச்செந்தூர் அருகேயுள்ள மூலக்கரையைச் சேர்ந்த பண்ணை யார் குடும்பத்துக்கும், பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளாக பெரும் பகை இருந்து வருகிறது. வெங்கடேஷ பண்ணையாரின் தாத்தா அசுபதி என்பவர் முதலில் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து இருதரப்பிலும் சிலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். மோதல் உச்சகட்டத்தை எட்டிய தைத் தொடர்ந்து பசுபதி பாண்டியன் திண்டுக்கல்லில் குடியேறினார்.
இந்நிலையில் வெங்கடேச பண்ணையார் கடந்த 2003 செப்டம்பர் 26-ம் தேதி சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டார். இதையடுத்து அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவராக சுபாஷ் பண்ணையார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் கடந்த 2006 ஏப்ரல் 7-ம் தேதி தூத்துக்குடி அருகே கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக 2012 ஜனவரி 10-ம் தேதி திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொல்லப்பட்டார். இதையடுத்து சுபாஷ் பண்ணை யாரை கொலை செய்ய, பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.