வண்ண அடையாள அட்டை பெற சென்னையில் மேலும் 16 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள்

வண்ண அடையாள அட்டை பெற சென்னையில் மேலும் 16 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள்
Updated on
1 min read

சென்னையில் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக வழங்குவதற்காக ஏற்கெனவே 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வருவதைத் தொடர்ந்து மேலும் 16 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஆர்.கே.நகர், பெரம் பூர் தொகுதிக்கு மண்டல அலு வலகம்-4, எண்.266, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21, கொளத்தூர், திருவிக நகர் தொகுதிகளுக்கு மண்டல அலுவல கம்-6, எண்.5, ஆண்டர்சன் சாலை, அயனாவரம், சென்னை-23, வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் ஆகிய தொகுதி களுக்கு மண்டல அலுவலகம்-8, எண்.36பி, புல்லா அவன்யூ சாலை, செனாய் நகர், சென்னை-30 என்ற முகவரியில் வாக்காளர் சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், எழும்பூர், ராயபுரம் மற்றும் துறைமுகம் ஆகிய தொகுதி களுக்குமண்டல அலுவலகம்-5, எண்.62, பேசின் பால சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளுக்கு மண்டல அலுவலகம்-9, எண்.4, 4வது குறுக்குத் தெரு, லேக் வியூ ஏரியா, நுங்கம்பாக்கம், சென்னை-34, விருகம்பாக்கம் மற்றும் தியாகராய நகர் ஆகிய தொகுதிகளுக்கு மண்டல அலுவலகம்-10, எண்.64, என்எஸ்கே சாலை, கோடம்பாக்கம், சென்னை-24, சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு மண்டல அலுவலகம்-13, எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20, மைலாப்பூர் தொகுதிக்கு மண்டல அலுவலகம்-9, எண்.4, 4வது குறுக்குத் தெரு, லேக்வியூ ஏரியா, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரியிலும் சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் மேற் கண்ட வாக்காளர் சேவை மையங்களில் படிவம் 001டி மற்றும் ரூ.25 செலுத்தி 3 நாட்க ளுக்குள் வாக்காளர் வண்ண அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இத்தகவல் சென்னை மாநகராட்சி தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in