

வனப் பகுதிகளையொட்டிய விவசாயத் தோட்டங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட 50 சதவீத வண்ணத்துப்பூச்சிகள் அழியும்தருவாயில் இருப்பதாகப் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூச்சி இனங்களில் பல வண்ணங்களில் காண்போர் கண்களையும், மனதையும் கவரக்கூடியவை வண்ணத்துப்பூச்சிகள். இப்பூச்சிகளின் வாழ்வை ஆரோக்கியமான சூழ்நிலை மண்டலத்தை உறுதிப்படுத்தும் காரணியாகக் கருதலாம்.
இவைகள் பசுமை மாறாக் காடு கள், புதர் காடுகள், புல்வெளி கள் உள்ளிட்ட பல்வகை வாழ் விடங்களில் வாழக் கூடியவை. இந்தி யாவில் வண்ணத்துப்பூச்சிகளில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான சிற்றினங்கள் இருப் பதாகக் கண்டறியப்பட்டுள் ளது.
தமிழகத்தில் 400 வகையான வண் ணத்துப்பூச்சிகள் இருப்பதாகவும், அவற்றில் 110 வகையான வண் ணத்துப்பூச்சிகள் மதுரை, திண்டுக் கல் மாவட்ட எல்லையில் அமைந் துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலை யின் முக்கிய கோடைவாசஸ் தலமான சிறுமலையில் இருப்ப தாகவும், தற்போது இப்பகுதி விவசாயத் தோட்டங்களில் தெளிக் கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து களால் இந்த வண்ணத்துப்பூச்சிகள் அழிந்து வருவதாகவும் வன ஆர்வலரும், காந்திகிராமம் கிராமி யப் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியருமான ராமசுப்பு மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் ராமசுப்பு கூறியதாவது;
வண்ணத்துப்பூச்சிகள் 1000 கி.மீ-க்கும் அதிகமான தூரத்துக்கும் இடம்பெயர்கின்றன. இவைகள் பருவமழையை நோக்கி, ஓரிடத் தில் இருந்து மற்றொரு இடத் துக்கு இடம்பெயரும். சில வண் ணத்துப்பூச்சிகள் எறும்புகள், பூச்சி கள், முதுகெலும்பிகள் மற்றும் நுண்ணுயிரிகளுடன் ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்கின்றன. தாவரங் களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிற இவற்றின் வாயில் உள்ள நீண்ட குழல் போன்ற அமைப்பு மூலம் மலர்களில் உள்ள தேனை சேகரித்து உண்ணும். மரத்தில் வடியும் நீர்மம், சாணம், மகரந்தத் தூள் மற்றும் அழுகிய இலை, பழங்களை உண்ணும். இவை ஆண்டு முழுவதும் பூக்கள் கிடைக்கின்ற காடுகளைச் சார்ந்தே வாழ்கின்றன.
அயல்நாட்டுத் தாவரமான லண் டனாவின் பரவலால் இப்பூச்சிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு மலைப் பகுதிகளில் அதிகரித்துள் ளது. இவை அரிதான மரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவ தாக, சமீபத்திய எங்களுடைய ஆய்வில் நிரூபித்துள்ளோம்.
இவை தங்களுடைய முட்டைகளைப் பாதுகாப்பதற்கும், சரியான நேரத்தில் பொரித்து குஞ்சு புழுக்கள் வெளிவருவதற்கும் தகுந்த தட்ப வெப்பம் தேவைப் படுகிறது. குறைந்த மழைப் பொழிவால் தாவரங்கள் வளர்ச்சி குறைந்து இவற்றின் எண்ணிக்கையும் குறைகிறது. தோட்டப் பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி மருந்துகள் வண்ணத்துப்பூச்சி களையும் சேர்த்து அழித்துவிடுகின் றன. வண்ணத்துப்பூச்சிகளின் புழு மற்றும் கூட்டுப் புழுக்களை எறும்புகள், பறவைகள், ஈக்கள் மற்றும் குருவிகள் இரையாக உட்கொள்கின்றன. உணவு பற் றாக்குறையால் சிறிய வகை பாலூட்டிகள், பாம்புகள், பல்லிகள், சிலந்திகள் உள்ளிட்டவையும் வண்ணத்துப்பூச்சிகளைச் சாப்பிடு கின்றன.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் மகரந்தத் தூள்களை இவை அறவே வெறுக் கின்றன. அதிகப்படியான காற்று இவற்றின் வாழ்விடத்தையும், இடம் பெயர்வையும் தடுத்து இவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. அதனால், இந்தியாவைத் தாயக மாக கொண்ட வண்ணத்துப்பூச்சி கள் 50 சதவீதம் அழியும்தருவாயில் இருப்பதாக, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.