

ராசிபுரம் புதுப்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன்(65). இவர் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அண்ணனின் மருமகன் ஆவார். இவர் கடந்த செப்.30-ல் ராசிபுரம் காவல் நிலையத்தில் மனு அளித்தார்.
அதில், ‘சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தரக் கோரி என்னிடம் 15 பேர் ரூ.76.50 லட்சம் கொடுத்தனர். அத்தொகையை முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் வேலை வாங்கித் தரவில்லை’ எனக் கூறியிருந்தார்.
மனுவை ராசிபுரம் போலீஸார்,நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றினர். இந்நிலையில், நேற்று இந்த புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.