

ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக கைதான பாஜக நிர்வாகி கல்யாணராமன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மக்களிடையே மத வெறுப்புணர்வு மற்றும் மோதல், கலவரத்தை தூண்டும் நோக்கில் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக பாஜக நிர்வாகியான கல்யாணராமன் மீது வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கல்யாணராமனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கல்யாணராமன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வக்குமார், மனுதாரரான கல்யாணராமனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.