சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்

ஜெ.சத்ய நாராயண பிரசாத்
ஜெ.சத்ய நாராயண பிரசாத்
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ஜெ.சத்ய நாராயண பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோர் கடந்த அக்.20-ம் தேதி புதிய கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த ஜெ.சத்ய நாராயண பிரசாத்தை, உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் நாளை புதிய நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in