

போலி மதுபானம் தயாரித்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காட்பாடி - திருவலம் சாலையில் உள்ள செல்வம் நகரில் ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கடந்த 29-ம் தேதி அங்கு சோதனை நடத்தினர். இதில், வேலூர் ரங்காபுரம் அழகிரி நகரைச் சேர்ந்த நாகேந்திரன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பறவை ராஜா மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நாகேந்திரனின் மனைவி ஜோதிலட்சுமி, திருச்சியைச் சேர்ந்த தேவி, அவரது காதலன் குளித்தலை சுரேஷ் ஆகிய 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இதற்கிடையே, கைது செய் யப்பட்டு வேலூர் சிறையில் அடைக் கப்பட்டிருந்த நாகேந்திரன் மற்றும் பறவை ராஜாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மதுவிலக்கு கூடுதல் எஸ்பி பாலகிருஷ்ணன் கூறும் போது, ‘‘செம்மரம் கடத்தல் மற்றும் மாதனூர் பாமக பிரமுகர் சின்ன பையன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப் பட்டிருந்தபோது நாகேந்திரனின் மனைவி ஜோதிலட்சுமிக்கு திருச்சியைச் சேர்ந்த தேவி அறிமுகம் ஆகியுள்ளார்.
அப்போது, அவர் கொடுத்த யோசனையின்படி போலி மதுபானம் தயாரிப்பில் நாகேந்திரன் மற்றும் பறவை ராஜா ஈடுபட்டுள்ளனர். அதற்கு திண்டுக்கல் மாவட்டத் தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். போலி மது பானம் தயாரிக்க ஜோதிலட்சுமியின் தங்கை சங்கீதா என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். நாகேந்திரன் கொடுத்த தகவலின்படி சங்கீதா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜோதிலட்சுமி, திருச்சியைச் சேர்ந்த தேவி, அவரது காதலன் குளித்தலை சுரேஷ் ஆகியோரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. திருச்சி தேவி, குளித்தலை சுரேஷ் மீது பெரம்ப லூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் காவல் முடிந்த நாகேந் திரன், பறவை ராஜா ஆகியோர் திங்கள்கிழமை (இன்று) சிறையில் அடைக்கப்பட உள்ளனர்’’ என்றார்.