உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி: மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்திய விஜய்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுடன் விஜய்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுடன் விஜய்.
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய்யைச் சந்தித்தனர். அவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளை நேரில் சந்தித்த விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கப் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், ''ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்துக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வாகை சூடிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகளும், தளபதி விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இவர்கள் அனைவரும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க, மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டுசென்று, அதனைத் தீர்க்கும் நல்வாழ்வுப் பணியைத் தளபதி விஜய் உத்தரவுப்படி செவ்வனே செயல்படுத்தி மக்கள் பணிகளைத் தொடர்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in