Last Updated : 27 Oct, 2021 08:31 AM

 

Published : 27 Oct 2021 08:31 AM
Last Updated : 27 Oct 2021 08:31 AM

மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

புதுச்சேரி தர்மாபுரி தனக்கோடி நகர் முதலாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசுகர் (38). எலக்ட்ரீஷியன். இவர் மும்பையில் பணியாற்றிய போது ஜெல்சி பிரின்சில்லா (31) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

மகன் பிறந்ததையடுத்து புதுச்சேரிக்கு வந்த ஜெல்சி பிரின்சில்லா தொண்டமாநத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது உடன் பணியாற்றிய ஆண் நண்பருடன் ஜெல்சி பிரின்சில்லா செல்போனில் பேசி வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த கணவர் ஜெயசுதன் கடந்த 2015 பிப்ரவரியில் தனது மனைவி ஜெல்சி பிரின்சில்லாவை அடித்து, துப்பட்டாவால் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

கொலையை மறைக்க தனது நண்பர்களான கடலூர் நத்தவெளி ராமமூர்த்தி (24), கடலூர் வண்டிப்பாளையம் முத்துராஜ் (38) ஆகியோரை அழைத்து, ஜெல்சியை ஆம்புலன்ஸில் ஏற்றி கடலூர் நோக்கி புறப்பட்டுள்ளார்.

இடையே வில்லியனூர் புறவழிச்சாலையில் தனது உறவினர் வீட்டிலிருந்த மகனைப் பார்க்க ஆம்புலன்ஸை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வில்லியனூர் போலீஸார் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்ததில்,

ஜெல்சி தூக்கமாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றதாகவும், மேல்சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். போலீஸார் ஆம்புலன்ஸை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, ஜெல்சியை பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஜெய சுகரிடம் புகாரைப் பெற்ற மேட்டுப்பாளையம் போலீஸார், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரித்தனர். இதனிடையே இறந்த ஜெல்சியின் பிரதேச பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்ததில், மனைவி ஜெல்சியை கொலை செய்ததை ஜெய சுகர் ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கு புதுச்சேரி 2 வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மனைவியை கொலை செய்த ஜெய சுகருக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைத்ததற்கு ஓராண்டு சிறையும், பொய் புகாருக்கு 3 மாத சிறையும்,

ரூ. 6,100 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், கொலையை மறைக்க உதவிய ராமமூர்த்தி, முத்துராஜ் ஆகிய இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x