குழந்தைகள் பாலியல் துன்புறுத்தப்படும்போது பாதிக்கப்பட்ட குழந்தையைத் தவிர வேறு சாட்சிகளை எதிர்பார்க்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தப்படும்போது பாதிக்கப்பட்ட குழந்தையைத் தவிர வேறு சாட்சிகளை எதிர்பார்க்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பொள்ளாச்சியில் 2019-ம் ஆண்டுமே மாதம் வீட்டில் தனியாக இருந்த11 வயது சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்த ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொள்ளாச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கில் ரூபனுக்கு 7ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து ரூபன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உயர் நீதிமன்றநீதிபதி பி.வேல்முருகன் முன்பாகநடந்தது. அப்போது, ரூபன் தரப்பில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அன்று, அந்த இடத்தில் தான்இல்லை என்றும், சிறுமியை தவிரவேறு சாட்சியங்கள் யாரும் கிடையாது எனவும் வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், ரூபன்ஏற்கெனவே இதே சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், அதன்பிறகும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சிறுமிஅளித்த வாக்குமூலம் தெளிவாகஇருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட் டது.

அதையடுத்து நீதிபதி, ‘‘அறியாமை, தனிமையை பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும்போது போக்ஸோ வழக்குகளில் அவர்களைத்தவிர வேறு சாட்சியங்களை எதிர்பார்க்கமுடியாது’’ என்றும், பாதிக்கப்பட்டசிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும், நம்பிக்கை தரும் வகையிலும்இருப்பதாகக் கூறி, ரூபனின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in