

சென்னை அண்ணா நகர் 18-வதுமெயின் ரோடு 7-வது தெரு வள்ளலார் குடியிருப்பில் வசித்து வருபவர் இளங்கோவன் (54). தொழிலதிபரான இவர், கடந்த 1-ம் தேதி இரவு வீட்டின் முதல்மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் கீழ் பகுதிதாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீட்டிலிருந்த 100 பவுன் தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்ததினகரன்(35), அவரது மனைவி உஷாராணி(27), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த சிவா(32), திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை லோகேஷ்(25) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, நால்வரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து திருட்டு நகைகளை வாங்கியதாக எர்ணாவூரைச் சேர்ந்த மோகன்(55), ராணி(48)ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 65 பவுன் தங்கநகைகள், ரூ.2 லட்சம் மதிப்பிலானவைர நகைகள், ரூ.2.5 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.