சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு நட்சத்திர காவலர் விருது: காவல் ஆணையர் அறிவிப்பு

சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு நட்சத்திர காவலர் விருது: காவல் ஆணையர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போலீஸாருக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு இனி கூடுதலாக ஒவ்வொரு மாதமும் விருது வழங்கப்படும். கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) தலைமையிலான குழு, சென்னை பெருநகரகாவல் துறையில் சிறப்பான போலீஸாரை கண்டறிந்து அவர்களது பணியைமதிப்பிட்டு ‘மாதத்தின் நட்சத்திர காவலர்’ என்றவிருதை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

‘மாதத்தின் நட்சத்திரகாவலர்’ விருதை பெறதேர்ந்தெடுக்கப்படும் போலீஸாருக்கு ரூ.5ஆயிரம் பண வெகுமதியுடன், தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.

எனவே, போலீஸார்மெச்சத்தகுந்த பணியில்இருந்து அதன் விபரத்தை தங்கள் துணை ஆணையர் மூலமாக கூடுதல் காவல் ஆணையருக்கு தெரிவித்து மாதத்தின் நட்சத்திர காவலர் விருதினை பெறும் வகையில் சிறப்பாக பணி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in