

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடினால் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கு குறைந்த பட்சம் 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு மே மாதம் 16-ம் தேதி நடக்கும் என ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கு கிறது. இதற்கிடையில், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள் ளிட்ட பணிகளை தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. குறிப் பாக, கல்லூரி மாணவர்கள் மத்தியில் 100 சதவீதம் தேர்தல் வாக்களிப்பு தொடர்பான விழிப் புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று சென்னை ராயப் பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பங்கேற்றார். அப்போது அவர் மாணவர்களிடையே பேசு கையில், ‘‘மாணவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்போல் அலைய வேண்டியதில்லை. உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனில் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பெயர்களை பதிவு செய்திடலாம். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான தகவல்களை வாட்ஸ் அப்பில் புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பலாம்’’ என்றார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 23 சதவீதம் உள்ள னர். அவர்களில் குறைந்த அளவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். அவர்கள் மத்தி யில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே, தற்போது ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் விழிப் புணர்வு பிரச்சாரம் நடந்துள்ளது. தமிழகம் முழுதும் 600 கல்லூரி களிலும், சென்னையில் 33 கல்லூரி களில் 10 கல்லூரிகளில் விழிப் புணர்வு பிரச்சாரம் முடிந்துள்ளது. அடுத்த 15 நாட்களில் அனைத்து கல்லூரிகளிலும் இப்பணிகள் முடிக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு இதுவரை 1,212 புகார்கள் வந்துள்ளன. அதில் 750-க்கும் மேற்பட்டவை சுவரொட்டி கள், பேனர்களை அகற்றுவது தொடர்பாக வந்துள்ளன. இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் இடங்களில் அமைக்கப்பட்ட 93 ஆயிரத்து 756 போஸ்டர்கள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், வாட்ஸ் அப்பில் விதி மீறல் தொடர்பாக 160-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
தற்போது தேர்தல் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அரசியல் கட்சிகள் ஆன்லைனில் அனுமதிக்காக விண்ணப்பித்து வருகின்றன. தற்போது வரை, கூட்டத்துக்காக 294, வாகனங் களுக்கு 80, ஊர்வலம் 42, இதர அனுமதி 8 என விண்ணப்பங்கள் வந்துள்ளன.
தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளின் போது அனுமதி யின்றி மின்சாரம் எடுக்கப்பட்டால், மின்வாரிய அதிகாரிகள் பயன் படுத்திய மின்சாரத்தை கணக் கிட்டு, குறைந்த பட்சம் இரண்டு மடங்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படும், அதிகபட்சம் விதிகளின்படி கணக்கிட்டு அப ராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘பூத் சிலிப் போதும்!
தேர்தலின் போது வாக்காளர்கள் பூத் சிலிப் மட்டும் கொண்டு சென்றால் போதுமானது என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக் கானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,‘‘தேர்தல் ஆணையம் சார்பில் வீடு தோறும்,‘பூத் சிலிப்’ வழங்கப்படும். அதில் வாக்காளர் பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். அந்த ‘பூத் சிலிப்’ இருந்தாலே, எளிதாக வாக்களிக்கலாம். வேறு எந்த ஆவணமும் தேவை இல்லை. திடீரென வீடு மாறி சென்றிருந்தால், அவர்கள் விவரம் இடமாற்ற பட்டியலில் இருக்கும். அதை உறுதி செய்து ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்’’ என்றார்.