

5 ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.736 கோடி நிதி ஒதுக்கீடு செய் துள்ளதாக தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் தெரி வித்தார்.
அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர ராஜ் தலைமையில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங் கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது.
தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டுக்காக 2011 முதல் இதுவரை சுமார் ரூ.736 கோடி நிதியை ஒதுக்கி பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி உள்ளது. கிராம அளவில் விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்து, தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், மக்களின் நலன் கருதி விளையாட்டுத் திடல்கள் மற்றும் கட்டமைப்புகளை பராமரித்து ஒவ்வொரு திட்டத்தையும் கடமை உணர்வோடு நிறைவேற்ற வேண்டும். பயிற்றுநர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல் பட வேண்டும். இளைஞர்கள் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சியை மேம்படுத்தி, யோகா, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.