

தஞ்சாவூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது:
கடந்த 60 ஆண்டுகளாக தமிழ கத்தை ஆண்டு வரும் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உருவெடுத்துள்ளது. எங்கள் கூட்டணிக்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகி வரு கிறது. எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள், நெச வாளர்கள் தற்கொலை செய் யும் நிலை மாற்றப்படும். நம்மாழ் வார் விவசாயத் திட்டத்தின் அடிப் படையில், விவசாயிகளுக்கு தர மான விதை, நாற்று, நவீன கருவி கள், இயற்கை உரம் வழங்கி, 3 மடங்கு உற்பத்தி பெருக்கப் படும். தமிழக நதிகள் இணைக் கப்படும்.
கீழவெண்மணி ஓய்வூதியத் திட்டத்தில் 60 வயதுக்கு மேற் பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியமும் மீனவர் கள், நெசவாளர்களுக்கு ஓய்வூதிய மும் வழங்கப்படும். ரேஷன் பொருட்களும் வீடு தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார்.