அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் டயர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும்: அன்புமணி  

அன்புமணி: கோப்புப்படம்
அன்புமணி: கோப்புப்படம்
Updated on
1 min read

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் டயர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (அக். 26) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடுமையான டயர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. உடனடியாக டயர்கள் வாங்கப்படாவிட்டால், 40% பேருந்துகளை தீபாவளிக்கு இயக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது உண்மையானால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்!

போதிய டயர்கள் இல்லாததால் அரசுப் பேருந்துகளில் ரீ-ட்ரெட் செய்யப்பட்ட டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தேய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 34,000 டயர்கள் வாங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இதுவரை வாங்கப்படாததே சிக்கலுக்குக் காரணம். உடனடியாக டயர்களை வாங்கி, பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in