

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரளாவில் பெரும் மழைப் பொழிவு இருப்பதால் முல்லைப் பெரியாறு அணையை திறக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கக் கூடாது என கேரள அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரை தேக்கிவைக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளதை நினைவுபடுத்தி, தமிழகத்தின் நிலையை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.