

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜகவின் குரலுக்கு செவிசாய்த்து தமிழக முதல்வர் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கோயில்களை திறந்தது, ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படாத ரூ.100 கோடி டெண்டர் விவகாரத்தை குறிப்பிடலாம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயலாற்றி வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம், தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. நடக்கப்போகிறது. முதலில் அமைச்சர்செந்தில்பாலாஜி தன் இடத்தை சுத்தம் செய்துவிட்டு, கேள்வி கேட்கட்டும். அதற்கு நான் பதில் சொல்கிறேன். அவர் வாயில் இருந்தே அதற்கான ஆதாரம் வரும். நாங்கள் ஆதாரத்துடன்தான் பேசி வருகிறோம். எனவே, தமிழ்நாடு மின்சார வாரியம் மீது கவனம் செலுத்தி, அமைச்சர் செந்தில்பாலாஜி மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.