தொகுதிப் பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தொகுதிப் பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Updated on
1 min read

திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. வேறு சில கட்சிகளும் கூட்டணிக்கு வரலாம் என கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தொகு திப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சி யினருடன் பேச மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. குழு உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர். இதில், எந்தெந்த தொகுதிகளில் திமுக போட்டியிடுவது, கூட்டணி கட்சி களுக்கு விட்டுக் கொடுக்கும் தொகுதிகள் எவை என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழி லாளர் சங்கம், ஐக்கிய தொழிற் சங்க சம்மேளனம், பாரதிய பழங்குடியினர் மக்கள் நலச் சங்கம், அகில இந்திய பழந் தமிழர் மக்கள் கட்சி, நமது கொங்கு முன்னேற்ற கழகம், தமிழ் நாடு அனைத்து மருத்துவர் சமூக நலச் சங்கம், தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் உரிமை பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மாநிலச் சங்கம், ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக தர்ஹாக்கள் பேரவை, தலித் பாதுகாப்பு பேரவை, தமிழர் நீதிக் கட்சி ஆகிய 12 கட்சிகளின் நிர்வாகிகள் நேற்று சந்தித்து திமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

கடந்த 13-ம் தேதி 19 அமைப்பு கள் நிர்வாகிகளும், 14-ம் தேதி 27 அமைப்புகளும் 15-ம் தேதி 18 அமைப்புகளின் நிர்வாகிகளும் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கடிதம் அளித்திருந்தனர். இது வரை 76 அமைப்புகள் திமுக கூட்ட ணிக்கு ஆதரவு தெரி வித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in